போட்டோஷாப்பில் தமிழில் டைப் செய்வது மிக கடினமான விசயமாக இருக்கலாம் உங்களுக்கு. அதை எளிதில் சரிசெய்யலாம். முன்பெல்லாம் போட்டோஷாப் மிடில் ஈஸ்டர்ன் வெர்சன் என வரும் அதில் மட்டுமே அரபி மற்றும் இந்திய எழுத்துருக்களை பயன்படுத்த இயலும், CS6 க்கு பிறகு வந்த வெர்ஷன்களில் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டது. நீங்கள் உங்களது போட்டோஷாப்பில் உள்ள Preference Settingsல் மாற்றம் செய்து தமிழை பிழையில்லாமல் போட்டோஷாப்பில் பார்க்க முடியும். இல்லையெனில் எனது தமிழ் fonts பயன்படுத்தி உங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளுங்கள். எனது fonts 150 different styles இருக்கிறது. உங்களது டிசைனிங்கிற்கு எளிதாக இருக்கும். அதன் லிங்க் இங்கே உள்ளது
ஒவ்வொரு படத்திற்கும் மெட்டா டேட்டா எனும் குறி வார்த்தைகளை சேர்க்க முடியும்.. எடுத்துக்காட்டாக நீங்கள் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படம் எனில் Tour, 2017, மேலும் அந்த போட்டோவில் யாரெல்லாம் இருக்கிறீர்களோ அவர்களது பெயர் எல்லாம் பதிவு செய்ய முடியும். இது படங்களை பின்பு தேடி எடுக்க உங்களது File Explorerல் மூலம் தேடி எடுக்க எளிதாக இருக்கும். இதைப்பற்றி அறிய இந்த வீடியோவை பார்க்கவும்,